• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை வருகை..,

ByPrabhu Sekar

Aug 1, 2025

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இலங்கை கடற்படையால் கட்சத் தீவு அருகே பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை தந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இரண்டு படகுகளில் சென்ற மீனவர்கள் அனைவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இதில் படகு ஓட்டுனர்கள் இருவரை ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் மத்திய மாநில அரசுகளின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் அந்த இரண்டு மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

அந்த இரண்டு மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மரியானா கேம்பில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உடல் பரிசோதனைகள் என மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இரண்டு மீனவர்களையும் இந்திய தூதரக அதிகாரிகள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை வந்த இரண்டு மீனவர்களையும் விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை சுங்க சோதனை என அனைத்தும் முடித்த பின்பு வெளியே வந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அவர்களுடைய சொந்த மாவட்டத்திற்கு தனி வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.