தென்காசி மாவட்டத்தில் கடந்த காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகிறது இதற்கு காரணம் போக்குவரத்து நெருக்கடி ஆக்கிரமிப்புகள் கண்டுகொள்ளாத போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பல தடவை எடுத்துக் கூறியும் செய்திகள் மூலமாக தெரிவித்தும் நடவடிக்கை இல்லை செயலிழந்த போக்குவரத்து காவல்துறையாக உள்ளது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ஆக்கிரமிப்பின் பிடியில் தென்காசி

போக்குவரத்து காவல்துறை எங்கே……..?
தென்காசி நகரப் பகுதிகளில் ரதவீதிகள் யானை பாலம் முதல் குற்றாலம் வரை கூல கடை பஜார் மேம்பாலத்திலிருந்து குத்துக்கல்வலசை வரை கார் லாரி மினி பஸ் பார்க்கிங் பகுதியாக மாறி வருகிறது. பல தடவை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை தினமும் நகர் வளம் பொழுதுபோக்குக்காக பணி செய்வது போல இருந்தது. பல புகார்கள் பல செய்திகள் மூலம் தெரிவித்தும் செயலிழந்து போக்குவரத்து காவல்துறையாக உள்ளது. இதற்கு காரணம் அதிகாரிகள் சரி வர செயல்படவில்லை போக்குவரத்து காவலர்கள் என்ன செய்ய முடியும்.