நாகை மாவட்டம் கீழ்வேளூரில் ப்ரைம் கட்டிடக்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டிட நுணுக்கங்களை அறிந்துக் கொள்ள நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சென்று பார்க்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியிருந்தனர். அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி அனுமதி பெற்றுத் தந்த நிலையில் கட்டிடடக்கலை கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் நவீன முறையில் கட்டப்பட்ட கட்டுமான பணிகளையும், அதன் நுணுக்கங்களையும் நேரில் பார்வையிட்டனர்.
கல்லூரி உதவி பேராசிரியர்கள் சந்துரு, சுபஸ்ரீ ஆகியோர் மருத்துவமனைகள் கட்டப்படும் படும்போது மேற்க்கொள்ள வேண்டிய, கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டிட நுணுக்கங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து பார்வையிட்ட மாணவர்கள் மருத்துவமனையை பார்வையிட அனுமதி அளித்த ஆட்சியர் ஆகாஷ் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்த அவர்கள் பாடத்திட்ட செயல்முறைகளை இது போன்று நேரடியாக வந்து அறிந்துக் கொள்வது தங்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.