நாகப்பட்டினத்தில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள அரசு ஐடிஐ வளாகத்தில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது.

அதற்கு ஆயுத்தமாகவும் வாசிப்பை நேசிக்கும் விதமாகவும் நாகை மக்களுக்கு புத்தக வாசிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார் அதில் ஒன்றான “நாகை வாசிக்கிறது” என்ற விழிப்புணர் நிகழ்வாகும் முப்பதாம் தேதி காலை 11:00 மணி முதல் 12 மணி வரை நாகை முழுவதும் உள்ள மாணவ மாணவியர் மற்றும் பலதரப்பட்ட எல்லா மக்களும் வாசித்தல் நிகழ்வை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடிதம் வாயிலாக அறிவுறுத்தினார். ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி தூய மைக்கேல் அகாடமி பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் வாசித்தல் வழியாக “நாகை வாசிக்கிறது” என்ற விழிப்புணர் பணியை மேற்கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக மேற்கொண்ட மாணவ மாணவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் திரு ஆல்பிரட் ஜான் அவர்களும் பள்ளி முதல்வர் திருமதி சூசன் அல்பிரெட் அவர்களும் பாராட்டினர்.