• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மட்டும் வைப்பு நிதியா?

Byமகா

Jul 30, 2025

சிவகாசியில்பிரதம மந்திரி விக்ஷித் பாரத் ரோஜ்கார் யோஜனா
(பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரத வேலைவாய்ப்பு திட்டம்)
விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்டது.

மதுரைமண்டல ஆணையாளர் அழகியமணவாளன், இந்த புதிய திட்டம் குறித்து விளக்கினார். இத்திட்டம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களை அந்தந்த நிறுவனங்கள் தக்கவைத்துக்கொள்ளவும் உருவாக்கப்பட்டது என்றார். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ( 01/08/2025) நிறுவனங்களில் புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு ஒருமாத சம்பளம் ரூபாய் 15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை இரண்டு தவணையாக 6 மாதம் கழித்தும், பின் அடுத்து 6 மாதம் கழித்தும் வழங்கப்படும்.

நிறுவனங்களுக்கு தொழிலாளர்களின் சம்பளத்திற்கு ஏற்றார்போல் ஊக்கத்தொகை வழங்கப்படும். புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக மாதத்திற்கு ரூபாய் 3- ஆயிரம் வரை 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை நிறுவனத்திற்கு வழங்கப்படும். இத்திட்டம் எல்லா நிறுவனங்களுக்கும் வருகிற 2027-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ( 31/7/2027) நடைமுறையிலிருக்குமெனவும், உற்பத்தித்துறைக்கு மேலும் 2 ஆண்டுகள் மத்திய அரசின் இந்த ஊக்கத்தொகை நீட்டிக்கபடவுள்ளது. என்றார்.

சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகளில் சுமார் 4- லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தொழிற்சாலைகள் மட்டுமே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்துவதாக தெரிவித்த அவர், தங்களுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.