மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் வரவேற்றார். விழாவில் நன்கொடையாளர் தொழிலதிபர் ஞானசிகாமணி அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு தேவையான கால்பந்து, கூடைப்பந்து, சதுரங்க பலகைகள், கேரம் போர்டு, கிரிக்கெட் மட்டை, டென்னிஸ், பேட்மிண்டன், ரிங் பால், ஸ்கிப்பிங் கயிறு மற்றும் பிற விளையாட்டு உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.
மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




