புதுக்கோட்டை நகர்புறத்தில் 10 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன இந்த பத்து ரேஷன் கடைகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கும் இடம் கீழ 2ம் வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடையாகும் இந்த கடையில் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே குடும்ப அட்டைக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் இன்று ஏராளமான பெண்கள் ரேஷன் கடையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 6 மணி முதல் காத்திருப்பதாக பெண்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் அரசு உடனடியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதம் முழுவதும் மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று காலை 6 மணி முதல் தற்போது வரை ஏராளமான பெண்கள் மண்ணெண்ணெய் வாங்க கூடியதால் பரபரப்பு ஏற்பட்டு தள்ளுமுள்ளானது. மேலும் இந்த நடைமுறையை மாற்ற கோரி பெண்கள் ரேஷன் கடையில் பணியாற்றும் அலுவலர்களை திட்டி தீர்த்ததால் பரபரப்பானது.