காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை மகா ஜனங்கள் சார்பில் திருப்பதியில் பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமயத்தில், ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, துறவிகள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ கடைப்பிடிப்பர். இந்த நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத, வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வர். இம்மாதங்களில் துறவிகள் உணவு முறையில் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வர்.

காஞ்சி ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காமகோடி பீடத்தின் இரு ஆச்சாரியார்களும் திருப்பதி விநாயக் நகர், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்து வருகின்றனர். இதையொட்டி மதுரை பக்த ஜனங்கள் சார்பில் இன்று சிறப்பு பிக்ஷாவந்தனம் மற்றும் பாத பூஜை நடைபெற்றது.
எல்.வெங்கடேசன், வி.ஸ்ரீராமன், . நெல்லை பாலு, ஆடிட்டர் ஏ.பி.சுந்தா ஆகியோர் பங்கேற்றனர்.அடுத்த ஆண்டு சாதுர் மாஸ்ய விரதத்தை மதுரையில் கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. காஞ்சி மடத்தின் சார்பில் மூவருக்கும் ருத்ராட்ச மாலை குங்கும விபூதி பிரசாதம் மற்றும் அட்சதை வழங்கப்பட்டதுமுன்னதாக காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை மதுரை பிக்க்ஷா வந்தனம் கமிட்டி சார்பில் ஸ்ரீராமன் வெங்கடேசன் நெல்லை பாலு ஆடிட்டர் சுந்தர் ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர்.