மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், தேனூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் “அன்பு இல்லங்கள்” வீடுகளின் கட்டிட பணிகளுக்கான பூமி பூஜையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் வறுமை கோட்டிற்குள் உள்ள பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடுக்கான ஆணைகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊரக வளாச்சி முகமை திட்ட அலுவலர் வானதி,ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் இந்துமதி,உதவி செயற்பொறியாளர் சுப்பையா மேற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சிபிரேமா, பொற்செல்வி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கீதா சங்கரி ரம்யா ஊராட்சி செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.