சென்னை நேரு உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நான்காவது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை ஏசியன் ஸ்டார் சைன் ஸ்போர்ட்ஸ் கிளப் 2025 பொறுப்பேற்று நடத்தியது.

சிறப்பு விருந்தினராக இந்த போட்டிக்கு சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். இந்த போட்டியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த 167 வது வார்டு மாமன்ற உறுப்பினரான துர்காதேவி நடராஜன் எறிகுண்டு விளையாட்டு போட்டி பிரிவில் 4.58 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
இவரே 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் அதிவேகமாக ஓடி மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டு வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் இவர் மூலமாக சென்னை மாவட்ட அணிக்கு மற்றொரு பதக்கமும் கிடைத்தது.இவரே இரு பதக்கங்களை வென்று சென்னை மாவட்ட அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்றவர்களுக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பேர் கலந்து கொண்டனர்.
இது பற்றி கேட்ட போது துர்காதேவி நடராஜன் வருகின்ற வரவிருக்கும் ஆண்டுகளில் கண்டிப்பான முறையில் தங்கப்பதக்கத்தை வென்று சென்னை மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பேன்,மேலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவன் நடராஜன் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் எனக்கூறியுள்ளார்.