விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சின்னப்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்காததாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட துணைச் செயலாளராக செயல்பட்டு வரும் முத்து செல்வியின் அறிவுரையை கேட்டு ஒருதலை பட்சமாக மாவட்ட செயலாளர் செயல்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்த மாவட்டச் செயலாளர் சின்னப்பரிடம் தங்களுக்கு முறையான அழைப்பிதழ் இதுவரை ஏதும் கொடுக்கவில்லை எனவும் தங்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதாகவும் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேடையில் அருகில் இருந்த மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வி தாங்கள் இது குறித்து கேள்வி கேட்க உரிமை இல்லை என கூறப்பட்டதாக தெரிகிறது இதனால் ஆத்திரமான நிர்வாகிகள் சேர்களை தூக்கி எறிந்து சென்றதால் கூட்டம் பெரிதும் பரபரப்பு காணப்பட்டது.