புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரின் மீது அவதூறாக பேசிய திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பசீர் ஆகிய 2பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் 30க்கு மேற்பட்ட மதிமுக நிர்வாகிகள் புகார்மனு அளித்தனர்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரை தனியார் யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்த திராவிட சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பஷீர் உள்ளிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம் பி துரை வைகோவை அவதூறாக பேசி உள்ளனர் இதனை கண்டிக்கும் விதத்தில் தமிழ்நாடு முழுவதும் மதிமுக சார்பில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலதில் புதுக்கோட்டை மாவட்ட மதிமுக மாவட்ட கழக செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் 30க்கும் மேற்பட்ட மதிமுக நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத் மற்றும் வல்லம் பஷீர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி நாஞ்சில் சம்பத் ஒரு கட்சியில் இருந்தவர் அல்ல எனவும் பல்வேறு காலகட்டத்தில் பல கட்சிகளில் பணியாற்றியவர் எனவும் கொள்கை உடன்பாடு இல்லாதவர் எனவும் நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் அரசியலுக்கு ஏற்றவர்கள் இல்லை எனவும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாஞ்சில் சம்பத் வருவாரே ஆனால் அதிமுகவினர் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்வார்கள் என தெரிவித்தார்.