• Thu. May 14th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு..,

ByP.Thangapandi

Jul 26, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் மஞ்சள் பை மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை நகராட்சி அலுவலகத்திலிருந்து நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகராட்சி பொறுப்பு நகர்மன்ற தலைவர் தேன்மொழி, சென்னை அணு ஆராய்ச்சி விஞ்ஞானி டேனியல் செல்லப்பா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

முருகன் கோவில் தெரு, தேனிரோடு, தேவர்சிலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று பொதுமக்களிடையே மஞ்சள் பை மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினர்.