பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பாட்டாளி மக்கள் கட்சியினர் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்பு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாவட்டத் தலைவர் குலாம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் குருவம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் சேது அரிகரன் கலந்து கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசின் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் தொடக்க விழா வெற்றி பெற வாழ்த்தும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி செயலாளர் சங்கரநாராயணன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கெய்சர், இளைஞரணி மாவட்ட செயலாளர் தமிழரசு, தென்காசி நகர செயலாளர் சங்கரநாராயணன் , செயற்குழு உறுப்பினர்கள் அழகப்பன், கோபால் ஒன்றிய செயலாளர்கள், கருப்பசாமி சண்முகசுந்தரம் , தங்கராஜ், கணேச பாண்டியன், ராஜாராம்துரை, ஒன்றிய தலைவர் தண்டபாணி, மாவட்டத் தொழிற்சங்க தலைவர் முருகன், தென்காசி நகர தலைவர் பழனி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சதீஷ், அச்சன் புதூர் தலைவர் அப்துல் மஜீத், அச்சன்புதூர் செயலாளர் மைதீன் பிச்சை, நகர அமைப்பாளர் தவசி கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)