தென்காசி சட்டமன்ற தொகுதி சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் பாடப்பிரிவாக வரலாறு வணிகவியல் கணக்குப்பதிவியல் உள்ளடக்கிய பாடப்பிரிவு வழங்க கேட்டு கோரிக்கை மனு வை சிவ பத்மநாதன் வழங்கினார்.
சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வகுமார் அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் அமைச்சர் அவர்களை சந்தித்து சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளியில் கணிதம் கணினி அறிவியல் பொது அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் மட்டும் உள்ளது. அந்தப் பள்ளியில் வரலாறு கணக்கு பதிவியல் வணிகவியல் அடங்கிய பாடப்பிரிவுகள் இல்லை .
எனவே அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் 11ஆம் வகுப்பில் இந்த பாடப்பிரிவை எடுத்து படிக்க வேண்டும் எனில் பக்கத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த பள்ளியில் போதுமான கட்டிட வசதி மற்றும் தேவையான ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆகையால் அமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலன் கருதி வருகிற கல்வியாண்டில் சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் பாடப்பிரிவாக வரலாறு வணிகவியல் கணக்குப்பதிவியல் உள்ளடக்கிய பாடப்பிரிவினை வழங்கிட வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் அவர்களும் வருகிற கல்வி ஆண்டில் கூடுதல் பாடப் பிரிவு ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்.













; ?>)
; ?>)
; ?>)