ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை முக்கிய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த முக்கியமான அமாவாசைகளில் புகழ்பெற்ற கோவில்கள் நீர்நிலைகள், காசி ராமேஸ்வரம் மலை கோவில்கள் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு வாரிசுகள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை தெப்பக்குளம் புகழ்பெற்ற ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை சார்பிலும் போடப்பட்டுள்ளன.