• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தலைமுறைகளுக்கு இடையேயான விழிப்புணர்வு..,

ByM.S.karthik

Jul 22, 2025

மதுரை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, அமெரிக்கன் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மூத்த குடிமக்கள் மற்றும் இன்றைய தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு குறித்த தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் டாக்டர். பால் ஜெயகர் இன்றைய தலைமுறையினரிடம் அலைபேசியின் பயன்பாடு குறித்தும், அதனுடைய தாக்கத்தை குறித்தும் தலைமை உரை ஆற்றினார். சமூக நலன் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் காந்திமதி வாழ்த்துரை வழங்கினார்.

காவல்துறை ஆய்வாளர் ஹேமமாலா பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.சமூகப் பணித் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகங்களை அரங்கேற்றம் செய்து சிறப்பித்தனர் . இதனையடுத்து சமூக நலத்துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துரைகளை வழங்கினர்.

இக்கருத்தரங்கில் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறைத் தலைவர் டாக்டர். பூர்ணிமா ஜெயசேகரன் நன்றியுரை வழங்கினார்.