தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 2 வது மாநில மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தவெக மாநில இரண்டாவது மாநாட்டிற்காக கடந்த 16ஆம் தேதி காலை 7 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடப்பது.
இதற்கு காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி சில நாட்களுக்கு முன்பு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சந்தித்து மனு அளித்தார்.
தவெக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் 35 நாட்கள் உள்ளன அதற்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளது.

இதற்காக மாநாட்டு திடல் 340 ஏக்கரும் கார் பார்கிங் போன்ற வற்றிற்காக 166 ஏக்கர் என மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் நாடு நடைபெறுவதற்காக சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது –
பந்தல் கால் நடும் விழாவிற்கு பின் தற்போது பின்மேடை மற்றும் பொதுமக்கள் எனக்கும் பணிகள் தொடங்க உள்ளது.