தமிழகத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கையிலும் சரி ,ஓட்டு வங்கிகளும் சரி அனைத்திலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா,எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் முதலிடத்தில் உள்ளது.

கொட்டும் மழையில் ராபின்சென் பூங்காவில் அண்ணா உருவாக்கிய திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை இரண்டாம் இடத்தில் தான் உள்ளது. இதை ஒப்புக் கொண்டு தான் உறுப்பினர் சேர்க்கை உயர்த்த அரசு திட்டங்களை பயன்படுத்தி உறுப்பினர் சேர்க்கை மறைமுகமாக முயற்சி நடைபெற்று வருகிறது., ஆட்சியை வைத்துக் கொண்டு கட்சியின் எண்ணிக்கை ஸ்டாலின் உயர்த்த பார்க்கிறார்கள்.
தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் நாங்கள் இல்லாமல் திமுக ஆட்சி அமைக்கும் முடியுமா? என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்ற அசைத்துப் பார்க்கலாம் என்றெல்லாம் பல முயற்சிகள் திமுகவினர் எடுத்தார்கள் அதில் புரட்சிதலைவர் காலத்திலே தோற்றுப் போய், அம்மா காலத்திலே தோற்று போய், இன்றைக்கு எடப்பாடியார் காலத்திலும் அந்த முயற்சியில் திமுக தலைவர்கள் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.
அதிமுகவில் வாக்கு வங்கி, தொண்டர்கள் எண்ணிக்கை கடல் போல் உள்ளது, கடல் பரப்பை கூட குறைத்து விடலாம் அதிமுக பரப்பை குறைக்க முடியாது ஆற்று நீர் கடலில் உள்வாங்கும் அதே போல எவ்வளவு தொண்டர்கள் வந்தாலும் அதிமுக உள்வாங்கிக் கொள்ளும் ,வங்க கடல் போல அதிமுக பரந்து விரிந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது இன்றைக்கு கடல் அலை போல அதிமுக உள்ளது என்பதற்கு எடப்பாடியாரின் எழுர்ச்சி பயணமே ஒரு சாட்சியாக உள்ளது.
வாக்காளர்களை 30 சதவீதத்தை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளாரஎன்று சொன்னால் யாரைப் பார்த்து பயந்து உத்தரவு போடுகிறார்?
உங்களோடு ஸ்டாலின் இந்த திட்டத்தின் மூலமாக அங்கு தொலைபேசி எண்கள் கேட்பதெல்லாம் நீதிமன்றமே தடை செய்திருக்கிறது, ஆக அரசு இயந்திரத்தை பயன்படுத்தி உறுப்பினர்களை சேர்ப்பது என்பது இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வழிமுறையாக நீதிமன்றமே இன்றைக்கு ஓடிபி நம்பர் போன்ற எல்லாம் வாங்கக்கூடாது என்று தற்காலிக தடை விதித்திருப்பதை நாம் பார்க்கின்றோம்.

திமுக கட்சிக்காரர்கள் மக்கள் கட்டுப்பாடு இல்லை என்பது உண்மையாக உள்ளது. கோவை நெல்லை மேயர் மாற்றம், காரைக்குடி மேயரை உங்கள் கட்சிக்காரர்களே மாற்ற முயற்சிக்கிறார்கள் பல மாநகராட்சி இதே நிலை உள்ளது.
மதுரையில் ஐந்து மண்டல தலைவர்கள்,நிலை குழு தலைவர்கள் ராஜினாமா செய்யப்பட்டு கைது படலமாக உள்ளது இதுதான் திமுக ஆட்சியின் நிலையாக உள்ளது.
ஊரிலே ஆட்டை காணோம், மாட்டை காணோம், ,அண்டாவை காணோம், குண்டாவை காணோம் என்று தேடி நிலை மாறி இப்போது மனிதனுடைய கிட்னியை காணும் என்று இந்த அவல ஆட்சியிலே உள்ளது, ஏழை எளிய மக்களுடைய வறுமையை போக்க வேண்டிய அரசு இன்னைக்கு அந்த வறுமையை பயன்படுத்தி மக்களுடைய உடல் உறுப்பை திருடுகிற ஒரு நிலைமை அவல நிலையை பார்க்கிறபோது இது வேதனையின் உச்சமாக இருக்கிறது
ஆகவே வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும், திமுக கட்சிக்கு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் திமுக கட்சிக்கு என்று நீங்கள் எடுக்கிற முயற்சியிலே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தால் இது சாத்தியமாகி இருக்கும் ஆகவே இது காலம் கடந்த முடிவு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்யது போல உள்ளது.
கட்சிக்காரர்கள் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று 75 வருட கட்சி இன்றைக்கு உத்தரவு இடுவது என்பது திமுக அதள பாதாளத்தில் உள்ளது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டது, இனி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
இனியும் இந்த அரசு தேவை இல்லை என்று மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள், இனியும் இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என மக்கள் தீர்க்கமாக முடிவில் உள்ளனர்.
சட்டசபையில் எடப்பாடியாரின் உரிமை குரலை நெறித்து, நேரலையை துண்டித்து ஜனநாயக படுகொலை செய்த இந்த மக்கள விரோத ஸ்டாலின் திமுக அரசுக்கு, பாடம் புகட்ட புகட்ட தான் எடப்பாடியாரின் எழுர்ச்சி பயணத்தில் மாபெரும் வரவேற்பை மக்கள் அளித்து வருகிறார் என கூறினார்.