தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் டி.வி.ராமசுப்பையர் என அவரது நினைவு நாளில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.
https://arasiyaltoday.com/book/at25072025
மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில், தினமலர் நிறுவனர் அமரர் டிவி ராமசுப்பையர் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வு எஸ்.எஸ்.காலனி காஞ்சிப்பெரியவர் கோவிலில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மதுரை பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். ஆடிட்டர் சேது மாதவா, காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தனர்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி.ராமகிருஷ்ணன், டி.வி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசியினை வழங்கி பேசினார்.
தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் டி.வி.ராமசுப்பையர். நாளிதழின் மூலமாக மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கப்பட்ட தமிழ் நாளிதழ் மூலமாக, தமிழக மக்கள் பயன்பெற கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டோடு இணைப்பு, ரயில் வசதி என பல மக்கள் நல திட்டங்கள் வர காரணமாக இருந்தார் என புகழாரம் சூட்டினார்.
பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தனர்.








