• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!

Byமதி

Dec 10, 2021

முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல் கோவையில் இருந்து நேற்று மாலை டெல்லி கொண்டு செல்லப்பட்டது. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை விமான நிலையத்தில் 13 பேரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகளும் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.