புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை சார்பாக மாவட்ட தலைவர் A.சுப்பையா தலைமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சை சாலை மச்சுவாடியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் குட்லக் AR.முகமது அப்துல்லா, செயலாளர் R.சங்கர், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் கண.மோகன் ராஜா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாநகரத் தலைவர் புதுகைப் புதல்வன் மாவட்ட செயலாளர் பீர்முகமது
நாகராஜன் ஸ்ரீதர் சங்கர நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.