மதுரை – தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் தார் சாலை அமைக்கப்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் டெல்லியைச் சேர்ந்த தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் சாலையின் தார் அளவு, உயரம் உள்ளிட்ட அம்சங்களை பரிசோதித்து பார்த்தனர். இதில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களும் ஆய்வில் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டார். தூத்துக்குடி (PIU) திட்ட இயக்குனர், மேற்பார்வை ஆலோசகர் குழு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களும் ஆய்வில் கலந்து கொண்டனர்.