• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மானியத்தில்  பழசெடி வழங்கிய விஜயவசந்த்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த 100 சதவீத மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்புகள் வழங்க ரூ.41.85 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

இத்திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.07.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டது. மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும்  வகையில் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய 3 வகையான பழச்செடிகள் அடங்கிய 21,150 பழச்செடி தொகுப்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுவருகிறது. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் பழசெடி தொகுப்பு மானியத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டாரம்  பயனாளிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு விஜய்வசந்த் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு ) ஆறுமுகம், தோட்டக்கலை அலுவலர் ஷிமாஞ்சனா, உதவி தோட்டக்கலை அலுவலர் பிரிநிஷ் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.