கடந்த 2021ல் இராஜபாளையம் தொகுதியில் சில புல்லுருவிகளை நம்பி நான் ஏமாந்து விட்டேன் நம்பினேன் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக கோட்டையை என நிரூபிக்க வேண்டும்.
அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு பூத் கம்பட்டி கிளைக் கழகம் என இரண்டு கட்சியும் வலுவாக உள்ளது இந்த கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற 7ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் சுற்றுப்பயணம் வருவதை அடுத்து முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகள் ஒவ்வொருத்தரும் தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைத்தனர் .
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் கே டி ராஜேந்திர பாலாஜி கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சில புல்லுருவிகளை நம்பி நான் ஏமாந்து விட்டேன் நான் அவர்களை நம்பினேன் அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டனர் நாம் இப்பொழுது வலுவாக உள்ளோம் ஆகையால் நாம் ஒன்றிணைந்து போராடி இராஜபாளையம் அதிமுக கோட்டை என நிரூபிக்க வேண்டும் சில கருத்துக்கணிப்புகள் வருகின்றன அதில் சில இடங்களில் இழுபறி என வருகிறது ஆனால் இராஜபாளையத்தில் இழுபெரிய கிடையாது இங்கு யார் அதிமுக வேட்பாளராக நின்றாலும் அவர்களை வெற்றியடை செய்ய வேண்டும் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும் .
திமுக அரசு கொஞ்சமாக கொள்ளையடித்திருக்கிறது பரவாயில்லை மக்கள் மன்னிப்பதற்கு மொத்தமாக கொள்ளையடித்துள்ளனர். இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதேபோல் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை செய்திடாத அளவிற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக வீடுவீடாக சென்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆயிரம் ரூபாய் உங்களுக்கு கிடைத்ததா இல்லை என்றால் கிடைப்பதற்கு வழி செய்கின்றோம் என்று கூறி உறுப்பினர் சேர்த்து வருகின்றனர். திமுகவின் நாடக ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் எதார்த்தமான அதிமுக ஆட்சி அமையும் எதார்த்தமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் கண்டிப்பாக முதலமைச்சராக மக்கள் ஆதரவு உள்ளது அதேபோல் பாரதிய ஜனதா கட்சியுடன் வாஜ்பாய் காலத்தில் கலைஞர் கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையில் முரசொலி மாறன் கேப்பிடேட் அமைச்சராக இருந்து பயனடைந்து கோடி கோடியே சம்பாதித்தபோது பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சியாக தெரியவில்லை.

அவர்களுக்கு இப்பொழுது தான் மதவாத கட்சி என தெரிகிறதா .அதிமுக மற்றும் பாரத ஜனக கட்சி கூட்டணி திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் பூத் கமிட்டி கிளைகள் நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் என வலுவான கட்சியாக இருப்பதால் இந்த கூட்டணியை பார்த்து அவர்கள் அஞ்சுகின்றனர் .
நாம் ஒன்றிணைந்து பாடுபட்டு வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வருகை புரியும்போது 50 ஆயிரம் பேர் கூடி வரவேற்பு கொடுக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார்.