இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக வேள்வி சாலை மற்றும் தெய்வத்தமிழ் வழிபாடு ஆகியவை இணைத்து நடைபெற்றது.

ஆனால் நாம் தமிழர் கட்சி ஆதரவுடன் வேள்விச்சாலைக்குள் புகுந்து சிவாச்சாரியார்களை அவமானப்படுத்தியுள்ளார்கள் சிவாச்சாரியார்களை அவமானப்படுத்துவது தமிழ் சமூகத்தை அவமானப்படுத்துவதற்கு சமம்..
இலங்கை யாழ்பாணம் அருகே வல்வெட்டி துறை சிவாலயத்தின் தர்மகர்த்தாவின் மகன்தான் பிரபாகரன். அந்தக் கோவிலில் இருந்த சிவாச்சாரியார் ஒருவர் சிங்கள வெறியர்களால் உயிருடன் எரிக்கப்பட்டார். அதைப் பார்த்த பிறகு தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினான். இந்து சமயம் காக்க, சிவாலயம் காக்க அர்ச்சகர்களை காக்கதான் பிரபாகரன் தனித்தமிழ் ஈழம் என சொல்லி ஆயுதம் ஏந்தினார்கள்.
ஆனால் நாம் தமிழர் வேண்டுமென்றே சிவாச்சாரியார்களை அவமதிக்க துணை போய் உள்ளது. எனவே இந்த கும்பாபிஷேகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழ் வழிபாடு தமிழ் சமூகத்தின் வாழ்வியல் நெறி சைவம் சார்ந்தது. சைவ நெறியின் வழிகாட்டிகள் சிவாச்சாரியார்கள். ஆகமங்களுக்கு, வேள்விகளுக்கு மொழி, ஜாதி கிடையாது.
திருப்புவனம் காவலாளி அஜித் உயிரிழந்த விவகாரத்தில் புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது ஆனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே நிகிதா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாளை முதல் திருத்தணியில் இருந்து துவங்கி .”வெல்லும் தமிழகம்” என்கிற பெயரில் இந்து மக்கள் கட்சி சார்பாக இந்துக்களின் கோரிக்கையை ஏற்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் 100% வாக்களிக்கிறார்கள். ஆனால் இந்துக்கள் 100% வாக்களிக்கவில்லை. இதனால் இந்து கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பர் யாருமில்லை..
மதுரையில் உள்ள முற்போக்கு தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை என்று சொல்லி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எனவே இந்துக்களின் வாக்கி வங்கியை வெளிப்படுத்துவதற்காக நாளை இந்த பிரச்சாரம் துவங்க உள்ளது.
ஆடு மாடுகளுக்கு மாநாடு நடைபெற்றதை வரவேற்கிறோம். ஆனால் அந்த மாநாட்டில் பசுவதை தடை சட்டம் குறித்து பேசாமல் மாட்டுக்கறி சாப்பிடுவது குறித்து பேசுகிறார்கள்.
செபஸ்டியன் சீமான் சிறுசிறு குழப்பங்களை ஏற்படுத்துகிறார். மாட்டுக்கறி தின்பதை ஆதரிக்கிறார் இது இரட்டை வேடமா இல்லையா. புழு பூச்சிக்கு கூட தீங்கு நினைக்காத ஆடிட்டர் ரமேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். இதேபோல் எங்கள் தலைவர்களை கொலை செய்து சிறையில் உள்ளவர்களை சீமான் சந்திக்கிறார்.
தமிழ்நாட்டை இன்னொரு காஷ்மீராக மாற்றுவதற்கு நாம் தமிழர் சீமான் முயற்சிக்கிறார். அந்த அடிப்படையில் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளும், கிறிஸ்தவ மோசடி மதமாற்ற சக்திகளும் தமிழை முன்னிறுத்தி மாநாடு போடுகிறார்கள். இவர்களெல்லாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். சீமான் அவர்களை சந்திப்பது தவறான முன்னுதாரணம். இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எத்தனை விதிமுறைகள் கொடுக்கப்பட்டது ஆனால் சமீபத்தில் நடந்த இஸ்லாமியர்கள் மாநாட்டிற்கும் சீமான் மாநாட்டிற்கும் எந்தவித விதிமுறைகளும் இல்லை.
மறைமுகமாக சீமான் தமிழக அரசால் ஊட்டி வளர்க்கப்படுகிறார்.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் ஜம்மு பிரகடனம் வெளியிடப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் 7 லட்சம் காஷ்மீர் பண்டிதர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜம்முவேல் ஹிந்துக்கள், காஷ்மீரில் இஸ்லாமியர்கள், லடாக்கில் பௌத்தர்கள். இந்துக்களுக்கு மீண்டும் காஷ்மீர் கொடுக்கப்பட வேண்டும். காஷ்மீரில் விரட்டியடிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஒரு மாநிலத்தை காஷ்மீரிலேயே ஒரு பகுதியைப் பிரித்து உருவாக்க வேண்டும் என்கிற ஜம்மு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்த விவகாரம் குறித்த கேள்விக்கு:
இந்த அரசாங்கத்தில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாது. காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையை கட்சி வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த டிஎஸ்பி நீதிக்கான போராட்டத்தை நடத்துகிறார் அவருக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கிறோம். காவல்துறையின் மரியாதை சீர்குலைந்து விட்டது. காவல்துறை லஞ்சஊழல் மயமாக இருக்கிறது. அஜித் குமார் விவகாரத்தில் காவல்துறை அடியாட்களாக செயல்பட்டிருக்கிறார்கள்.
மூன்று மாத குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கோவில்பட்டி வீரலட்சுமி பேட்டி அளித்துள்ளார். காவல்துறை முதல்வர் கையில் உள்ளது எனவே இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் தமிழ் ஓதுவார்கள் பின் ஓதுவார்கள் இல்லை என்ற பிரச்சினை குறித்த கேள்விக்கு:
பொய்யான தகவல். நம்முடைய வழிபாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்கிறார்கள்.
யாகசாலையில் அமர வைக்காமல் தனியாக அமர வைக்க வேண்டும் என்பதுதான் முறை. அமைச்சர் சரியாகத்தான் சொன்னார். உன் குடமுழுக்கு என்கிற வார்த்தை தவறு கும்பாபிஷேகம் என்கிற வார்த்தை தான் சரி. அமைச்சரே சொன்னாலும் தவறுதான். தேவாரம் திருவாசகம் எல்லாம் சாஸ்திர நெறி அல்ல பக்தி நெறி. சாஸ்திரம் என்பது வழிபாட்டு நெறியில் வரக்கூடியது. சாஸ்திரம், தோத்திரம் என இரண்டுக்குமே சம அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. சிவாச்சாரியார்கள் சொல்லக்கூடியது தூய தமிழ்.
சங்ககாலத்தில் இருந்து கும்பாபிஷேகம் என்றுதான் சொல்லப்படுகிறது. இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த செய்கிறார்கள் வேண்டுமென்றால் மசூதியில் சென்று பாங்கு என்று சொல்லாமல் தொழுகைக்கான அழைப்பு என்று சொல்ல சொல்லுங்கள். சமயச்சடங்குகளுக்கு மொழி பேதம் கிடையாது. தமிழ் வேறு சமயம் வேறு எனப் பிரிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அர்ஜுன் சம்பத் கூறினார்.
இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்துடன் மாவட்ட தலைவர் சோலை கண்ணன் அணுசக்தி அனுக்கிரகம் அமைப்பின் தலைவர் நெல்லை பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.