கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்த இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூர்யா பிரகாஷ் இளைஞர் காங்கிரஸ் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் டைசன் தலைமையில்,இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜிவா முன்னிலையில் வரவேற்பு அளித்தனர். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியடிகள் அஸ்தி, பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜர் திருவுருவ சிலை மற்றும் முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 30 கார்களுடன் நாகர்கோவில் மாநகரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருச்சிலைக்கும், டெரிக் சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், நிறைவாக குளச்சல் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு செய்தார்.
இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உட்பட புதிதாக தேர்வு பெற்ற இளைஞர் காங்கிரஸ் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரிக்கு வருகை தந்த குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்,தமிழக இளைஞர் காங்கிரஸ்யின் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட தலைவர் சூர்யா பிரகாஷ், மற்றும் குமரி மை சேர்ந்த டைசன்,ஜீவா, லாரன்ஸ் ஆகியோரை . கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் செயலாளரும். கன்னியாகுமரி நகராட்சி முன்னாள் உறுப்பினர் தாமஸ் அனைவரையும் வரவேற்றார்.