• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கருப்பசாமி கோவில் கிடா முட்டு போட்டி..,

ByP.Thangapandi

Jul 17, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இராஜக்காபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது சமைய கருப்பசாமி திருக்கோவில் இந்த திருக்கோவிலின் ஆடி திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து செவலை மறை, வெள்ளை கொங்கு, குட்டை கருமறை, குரும்பை உள்ளிட்ட பல்வேறு வகையான 40 க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

அதிகப்படியான முறை மோதிக் கொண்டு வெற்றி பெறும் கிடாவிற்கு 10 கிலோ பித்தளை அண்டா சிறப்பு பரிசாகவும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து கிடாவிற்கும் 5 கிலோ சில்வர் அண்டா, சேர் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன், இராஜக்காபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.