தென் தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமாக செயல்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில், இன்று அதிகாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

நாகர்கோவில் இருந்து கோவை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 1.45 மணியளவில் மதுரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து நிற்கும்போது, அந்த ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏற முயன்ற 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தடுமாறி திடீரென கீழே விழுந்தார்.
இந்த வேளையில் நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் கண்ணன், துரிதமாக செயல்பட்டு அவரை பாதுகாப்பாக மீட்டார்.

இந்த காட்சி ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.