• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை காந்தி மியூசியத்தில் பிபின் ராவத்திற்கு அஞ்சலி

Byகுமார்

Dec 9, 2021

மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முப்படைத்தலைமை தளபதியான பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில் அவரது மனைவி உள்பட 13 வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முன்னாள் ராணுவத்தினர் தொடர்ந்து இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த ஜெனரல் பிபின் ராவத் அவர்களுக்கு காந்தி மியூசியம்,மற்றும் பாரதி யுவகேந்திரா அறக்கட்டளை சார்பாக அருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் ஜவகர் பாபு தலைமையில் செயலாளர் நந்தாராவ்,சமூக ஆர்வலர்கள் நெல்லை பாலு, ஈஷா கரீம் ஆகியோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செய்தார்கள். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வை செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் களும் மறைந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.