ஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும்விதமாக அத்துறைகளின் சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று மைக் செட் உரிமையாளர்கள் தங்களது தனி திறன்களை வெளிக்காட்டும் விதமாக இசை போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில் மைக் செட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 3 ஆம் ஆண்டு இசைப்போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல்,தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஒலிபெருக்கியின் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போட்டியில் ஒலிபெருக்கிகள் வரிசையாக கட்டப்பட்டு அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும், தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் ஒலிக்கப்பட்டு, அதில் சிறந்து விளங்கும், ஒலி பெருக்கியை தேர்வு செய்யப்பட்டு அதில் வெற்றி பெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு ரொக்க தொகை பரிசாக வழங்கப்பட்டது.
இந்த போட்டியினை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இசை ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.