மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோயில் குடமுழுக்கு யாக சாலையில் தமிழ் மொழியில் பூஜை மறுப்பை கேள்வி கேட்ட தெய்வீக தமிழ் பேரவை சத்திய பாமா மற்றும் ஆதரவாளர்கள் மீ து திருப்பரங்குன்றம் ஸ்தானிக்கப்பட்டர்கள் இராசபட்டர் சாமிநாதன் ,ரமேஷ், சிவகுரு உள்ளிட்டோர் தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தமிழ்மீட்சிபாசறையின் சார்பில் இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் ஒட்டப்பட்ட கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் குடமுழுக்கில் தமிழ் வேத மந்திரங்கள் முழங்க கோரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் தமிழ் வேத விற்பனர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
