• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பற்றிய தீ..,

ByP.Thangapandi

Jul 11, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகள் அமைந்துள்ளனர்.

இந்த அடர் வனப்பகுதியில் புலி, யானை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் சரணாலயமாகவும், கலப்பு காடுகளாகவும் மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் மர்ம நபர்கள் வைத்த தீ மளமளவென பரவி மலை முழுவதும் புகைமண்டலமாக காணப்படுகிறது.,

தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக இந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் தீ வைப்பதும், மலை முழுவதும் எரியும் சூழலால் ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் இறந்திருக்கும் வேதனையான நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வனத்துறையினர் மலை அடிவார பகுதி மக்களிடையே போதிய விழிப்புணர்வைகளை ஏற்படுத்தி வனத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், தீ வைக்கும் மர்ம நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.