மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் கடந்த 8 ஆம் தேதி வட்டாச்சியர் பங்கேற்காததால் ஒத்தி வைக்கப்பட்ட மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று தலைமையிடத்து துணை வட்டாச்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இன்றும் வட்டாச்சியர் இக்கூட்டத்தில் பங்கேற்காததால் விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அடுத்ததடுத்த கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் நகராட்சி சார்பில் உயர் அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் பங்கேற்பதில்லை என்றும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கடைநிலை ஊழியரிடம் தலைமையிடத்து துணை வட்டாச்சியர், நகராட்சி சார்பில் உயர் அதிகாரிகள் கட்டாயம் வர வேண்டும் நீங்கள் வெளியே செல்லுங்கள் என கடிந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் விவசாயிகளும் குறைவாகவே கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அடுத்தடுத்த கூட்டங்களில் வட்டாச்சியரும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என விவசாயிகளும் கோரிக்கை வைத்தனர்.








