மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால்
காணொலி வழியாக 04.07.2025 அன்று புதுக்கோட்டையில் தேசிய
வேளாண் வளரச்சி திட்டத்தின்கீழ் 3.00 ரூ.கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டடம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

வேளாண்மை – உழவர் நலத் துறையின்கீழ் இயங்கும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை ஆகிய அனைத்து துறை சேவைகளும் விவசாயிகளுக்கு ஒரே இடத்தில் கிடைத்திடும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் செயல்படும். அரசாணைன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.