காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தெற்கு பகுதி திமுக சார்பில், 164 வது வட்டத்தில் பாகம் 342 அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.பாரதி துவங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக 164 வது வட்டத்தில் பாகம் 342 ஒரு அணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை ஆர். எஸ். பாரதி கழக அமைப்புச் செயலாளர் துவங்கி வைத்தார். இதில் அப்பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் சென்று அந்த வீட்டின் உரிமையாளர் குடும்ப தலைவரின் பெயரை சரி பார்த்து படிவத்தில் அவருக்கு பெயர்களை எழுதி அவர்களிடம் கையொப்பம் வாங்கி உறுப்பினர் சேர்த்து அதனுடைய மொபைல் எண் வந்ததா என்று சரி பார்த்து, இந்த உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

இதில் அந்த பெண் நான் மனப்பூர்வமாக இந்த உறுப்பினர் சேர்க்கையில் இணைகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். இதே போல் நம் அனைவரும் ஒன்று செயல்பட வேண்டும் என்று அங்குள்ள கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல கூட தலைவர் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்டச்செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளிடம் அனைவரும் கலந்து கொண்டு இந்த உறுப்பினர் சேர்க்கை முதல் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தினார்கள்.