விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் இ எஸ் ஐ மருத்துவமனை அருகே அமைந்துள்ள நெசவாளர் காலனி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கும்பாபிஷே விழா 12 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது. கும்பாபிஷே விழா முன்னிட்டு கடந்த 3 நாட்கள் யாக குண்டங்கள் வழங்கப்பட்டு யாக பூஜை நடைபெற்றது புதிதாக பாலமுருகன் ஐம்பொன் உற்சவர் சிலைக்கு பால் பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலாவாக வந்தனர்.

பின்பு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்கி கும்பங்களை எடுத்துச் சென்று கும்ப கலசத்திற்கு பூஜைகள் செய்தபின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இ எஸ் ஐ காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் கருத்தத்துரை துணைத் தலைவர் பாலமுருகன் நிர்வாக கமிட்டியினர் கருப்பசாமி மீனாட்சிசுந்தரம் .குருமூர்த்தி வெள்ளைச்சாமி. ஆகியோர் செய்திருந்தனர்.
