தேனி தெற்கு மாவட்டம் கம்பம் வடக்கு நகர தி.மு.க இளைஞரணி சார்பாக, முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா, திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரப் பொதுக்கூட்டம் கம்பம், பாவலர் படிப்பகம், கலைஞர் நூலகம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் வடக்கு நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அ.கலில்ரகுமான் தலைமை தாங்கினார்.
கம்பம் வடக்கு நகர திமுக செயலாளர் எம் சி வீரபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். தேனி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செஞ்சுரி செல்வம், துணை அமைப்பாளர் கராத்தே ராமகிருஷ்ணன், கம்பம் தெற்கு நகரச் செயலாளர் பால்பாண்டி ராஜா, வடக்கு நகர் அவை தலைவர் அப்துல் ரஹீம், வடக்கு நகர பொருளாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் இரா.பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் குரு குமரன், கழக இளம் பேச்சாளர் கனிஷ்டா, திமுக கழகப் பேச்சாளர் முருகேசன் சிறப்புரையாற்றினர்.

தமிழக அரசின் நான்காண்டு சாதனை குறித்து பேசுகையில்..,
இதுவரைக்கும் சுமார் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ள இளைஞர்களுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், ஒரு கோடியே 14 லட்சம் மகளிர்க்கு, ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இதுவரை மகளிர் சுமார் 685 கோடி பயணங்கள் மேற்கொண்டிருக்கிற, விடியல் பயணப் பேருந்து திட்டம், 18 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயன்பெற்றுள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகியவைகள் குறித்தும், திமுக அரசு இன்னும் இது போல் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதால் தான், நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு என முதல்வர் ஸ்டாலின் அரசை மக்கள் வாழ்த்துகின்றனர் என பேசினர்.

கூட்டத்தில், நகர் கழக இளைஞரணி துணை அமைப்பாளர்கள், சந்துரு, சேக் அப்துல் காதர், தமிழரசன், ஹரிஹரன், நகர துணை செயலாளர்கள் சுருளி, சஹானா சாதிக், மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், ஜெகதீசன், சொக்க ராஜா , மற்றும் நகர சார்பணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கம்பம் வடக்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.ராஜேஸ்குமார் நன்றி கூறினார்.
