விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாயூரநாதசுவாமி கோவில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இராஜபாளையம் காயல்குடி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்து துறைக்குட்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில் சிவாச்சாரியார்கள் சுவாமி, அம்பாள் மற்றும் நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி, விளைந்த நெற்கதிர்கள், தர்ப்பைபுல் சுற்றி கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

திருவிழா காலங்களில் மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறும். வரும் 6.07.2025 மாலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது அதைத் தொடர்ந்து 8.07.2025 ஆம் தேதி செவ்வாய்கிழமை தேர்த் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.