உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒத்தக்கடை உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகே நடைபெற்றது.

இதில் இடையப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியின் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமையில் போதைப் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து காவலர்களுக்கு எடுத்துரைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக காவலர்கள் உறுதி மொழி மேற்கொண்டனர்.
இந்த பேரணியில் பயிற்சி காவலர்கள் ஒத்தக்கடை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று போதைப் பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் துணை முதல்வர் மாரியப்பன், ஆய்வாளர் சோமசுந்தரம் உதவி ஆய்வாளர் லோகநாதன், நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.