தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான தளபதி விஜய் -ன் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மருத்துவ முகாம், இரத்த தான முகாம், மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

திருநள்ளாறு நசீர் அகமது ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாரிபாபு ஒருங்கிணைந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
