கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு ப்ளைவுட் நிறுவனத்தில், சக ஊழியர்கள் விளையாட்டாகச் செய்த செயலால் புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு குடல் வெடித்துபலத்த காயம் ஏற்பட்டது.
கேரள மாநிலம் கோட்டயம் கான்புழா அருகே உள்ள ஓடக்காலியில் அமைந்துள்ள ஸ்மார்ட் டெக் ப்ளைவுட் நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த சந்தோஷ் நாயக் (27),
பிரஷாந்த் பஹ்ரா(47) மற்றும் பியாக் சிங்,(19) ஆகியோர்
வேலை செய்து வந்துள்ளனர்.

வழக்கமாக, மரவேலைகள் முடிந்ததும், உடம்பில் ஒட்டியிருக்கும் மரத்தூசியை அகற்ற தொழிலாளர்கள் கம்ப்ரசரைப் பயன்படுத்துவது வழக்கம்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பணி முடிந்ததும் தொழிலாளர்கள் வழக்கம் போல் கம்பரசரை வைத்து உடலில் ஒட்டியிருந்த மர தூசிகளை அகற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சந்தோஷ் நாயக்கை பிடித்து விளையாட்டாக, சக ஊழியர்களான பிரஷாந்த் பஹ்ரா, பியாக் சிங் ஆகியோர் சந்தோஷின் ஆசனவாயில் காற்றை அழுத்தியுள்ளனர்.
இந்தச் செயலால், சந்தோஷின் குடல் பலத்த சிதைவுக்குள்ளானது. உயிருக்குப் போராடிய அவரை உடனடியாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குறுப்பம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரஷாந்த் பஹ்ரா, பியாக் சிங் இதுவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.