புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின் மாற்றியை துவக்கி வைத்தார்.

அப்போது கோட்டூர் ஊராட்சி தெற்கு தாளம்பட்டியில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருமயம் தெற்கு வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் அழகு சிதம்பரம் கணேசன் புதுக்கோட்டை மாவட்ட தெற்கு இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.அருண்சேகர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் உள்ள கோரிக்கைகளை அமைச்சர் ரகுபதி கேட்டு அறிந்து மின்மாற்றி இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக மின் மாற்றி அமைத்து தர வேண்டும் என தமிழ்நாடு மின்சார துறை அதிகாரியிடம் உத்தரவிட்டார்.