திமுக மகளிர் அணி தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கனிமொழி.குமரி கிழக்கு மாவட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் சந்திப்பு ஆலோசனை கட்டத்தில் பங்கேற்க நேற்று இரவு (ஜுன் 17)ம் தேதி கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரியில் நட்சத்திர தங்கும் விடுதியில் தங்கினார்.

இன்று காலை (ஜூன்_18) தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் ஆன மனோ தங்கராஜ் சால்வை கொடுத்து வரவேற்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மனோதங்கராஜ் உடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு,தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டிபன் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சந்தித்து சால்வை அணிவித்தார்கள்.

கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில்.
அண்ணன் திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் வெகுகாலமாக ஒன்றித்து பயணிக்கிறார். பாமக ஒருவேளை திமுக கூட்டணியில் இணைந்தால் தனித்து சென்றுவிடுவார் என்பது சிலரின் விருப்பம். முதல்வர் தளபதி ஸ்டாலின் உடன், அண்ணன் திருமா நல்லநட்ப்புடன் இருக்கிறார்.
பாஜகவின் மாநில தலைவர் இப்போது முருகனை கையில் எடுத்துள்ளோம்,அடுத்து தமிழகத்தை கையில் எடுப்போம் என்பது தமிழகத்தில் எப்போதுமே நடக்காது என தெரிவித்தார்.
