• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..,

BySeenu

Jun 18, 2025

கோவை போத்தனூர் ரயில் நிலையம் இரண்டாம் முனையமாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு அடைந்தவுடன் புதிய ரயில் சேவைகள் இங்கு இருந்து துவங்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்து உள்ளார்.

அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மின் தூக்கிகள், நடைபாதைகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து அவர் கூறும் போது, போத்தனூர் ரயில் நிலையம் இரண்டாவது முனையமாக தரம் உயர்த்தப்படுகிறது. அதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளில் இப்பணிகள் நிறைவடையும், இரண்டாம் முனைமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் போத்தனூரில் இருந்து புதிய ரயில் சேவைகள் துவங்கப்படும் என தெரிவித்தார். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் போல, கோவை போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும் என இங்கு உள்ள தொழில் முனைவோர்கள், ரயில் பயணாளிகள் கோரிக்கை வைத்து வந்து வரும் நிலையில், விரைவில் பணிகள் துவங்கி 3 ஆண்டுகளில் நிறைவு அடையும் என பொது மேலாளர் தெரிவித்து உள்ளது, இதனால் ரயில் பயணாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.