• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை..,

ByP.Thangapandi

Jun 15, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.கண்ணியம்பட்டியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செயதியாளர்களிடம். பேசிய ஆர்.பி.உதயக்குமார்.,

முதலில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை, இப்போது காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை, செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டார், காவலருக்கு பாதுகாப்பு இல்லை, இன்று காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை.

வீட்டில் ஒருவரை தாக்கினால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், காவல் நிலையத்தையே தாக்கினால் எங்க போய் புகார் அளிப்பது.

அதை கையில் வைத்துள்ள முதலமைச்சர் தார்மீக பொருப்பேற்று, முதல்வராக தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் தமிழ்நாடு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதே போன்று உழைக்கின்ற உத்தமராக உதயநிதியை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்காக சுற்று பயணம் வருகிறார்கள்.

அப்பா ஒருபுறம், மகன் ஒரு புறம் சுற்றி வருவதால் உதயநிதியை ஊருக்காக உழைக்கிறார் என்று உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை விளம்பர வெளிச்சத்தில் நடத்துகிறார்கள்.

ஊருக்கு உழைக்கிறார் உதயநிதி என்றால் 4 ஆண்டுகளில் இந்த நாடு வளர்ந்திருக்க வேண்டும்., நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை இனிமேல் இருக்கும் 6 மாதங்களில் எப்படி செய்ய முடியும். அப்படியானால் விளம்பரத்திற்காக ஊர் உலகத்தை சுற்றி வருவது மக்களுக்கு எந்த பலனும் தராது., விளம்பரத்திற்கு குறைச்சல் இல்லை பயங்கரமான விளம்பரம் செய்கிறார்கள்.

இன்று உசிலம்பட்டி தொகுதியை முதன்முதலில் ஸ்டாலின் அழைத்து உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சியை நடத்தினார் என்றால், திமுக துவங்கிய வரலாற்றில் ஏன் ஒரு முறை கூட உசிலம்பட்டியில் உதிக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

உசிலம்பட்டி தொகுதி இரட்டை இலையை, புரட்சி தலைவரை நேசிக்கிற மக்கள் என்பதால் அதிமுகவைச் சேர்ந்த பலர் பொறுப்பில் இருந்தனர்.

அதிமுக மக்கள் மீது அக்கரை உள்ள கட்சி, அதனால் தான் 52 ஆண்டுகளில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி வாகை சூடியுள்ளது. இனிமேலும் வெற்றி வாகை சூடும், எத்தனை முறை உடன்பிறப்பே வா என்று அழைத்தாலும் தலைமைக்கும் தொண்டர்களுக்கு மிக பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. தங்க காசை கொட்டி கொடுத்து உடன்பிறப்புகளை சரி செய்துவிட்டு மக்களிடம் இந்த ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரி செய்து விடலாம் என்று தான் ஊர் ஊராக ஊர்வலம் போய் உதயநிதி ஊருக்கு உழைக்கிறார் என்ற ஒரு செயல் திட்டத்தை, ஒரு மாயா ஜாலத்தை இந்த நாடக கம்பெனி அரங்கேற்றி வருகிறது.

அந்த நாடகத்தை பார்ப்பதற்கு தான் ஆள் இல்லை என்பதை போல அவர்கள் நடத்துகிற நாடகத்தை நம்பத்தான் தமிழ்நாட்டில் ஆள் இல்லை. அதிலும் உசிலம்பட்டி தொகுதியல் ஆளே இல்லை., என பேட்டியளித்தார்.