• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலய குத்துவிளக்கு பூஜை..,

ByR. Vijay

Jun 11, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூர் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத பொன்வைத்தநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி விஸாக உற்சவ விழா கடந்த 8 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் , தீபாரதனை நடைப்பெற்று பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைப்பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று குத்து விளக்கு பூஜை நடைப்பெற்றது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கண்ணிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து குத்துவிளக்கு ஏற்றி குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து 108 வேத மந்திரங்கள் முழங்க பூ, குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பால், பன்னீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷே பொருட்களால் மூலவர், அம்பாளுக்கு அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட பொன்வைத்தநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.