• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..,

ByKalamegam Viswanathan

Jun 7, 2025

இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் தியாகம் மற்றும் உறுதியான இறைநம்பிக்கையும் போற்றும் விதமாக இன்று பக்ரீத் பண்டிகை உலக முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வது வழக்கம் .

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து 2 ஆயிரம் அடி உயரமுள்ள திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சென்று அங்குள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான்,பக்ரீத் பணிகள் போது இப்பகுதி இஸ்லாமியர்கள் மலை மீது சென்று சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம் அதே போன்று இந்த ஆண்டும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இந்த தொழுகையில் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் பாலஸ்தீன மக்களுக்கும் சிறப்பு துவா செய்யப்பட்டது. பின்னர் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தழுவிக்கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் நிலவுவதால் காரணமாக அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் 100 மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணி ஈடுபட்டனர்.