• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரெப்போ வட்டி விகிதத்தில் ஆர்பிஐ அதிரடி

Byவிஷா

Jun 6, 2025

வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ஆர்பிஐ அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் இருமாத மறுஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முடிவுகளை அறிவித்தார். இதில் மிக முக்கியமான முடிவு ரெப்போ விகிதமாகும், இதில் ரிசர்வ் வங்கி அதை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, இது சந்தையின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் 0.5சதவீதம் குறைத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் 5.5சதவீதம் ஆக குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
இதனால், வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கிய வீடு, வாகனம் உள்ளிட்ட குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். கடந்த 6 மாதங்களில் மட்டும் 6.5சதவீதத்திலிருந்து 1சதவீதம் குறைந்து 5.5சதவீதம் ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே இரு முறை தலா 0.25சதவீதம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைக்கப்பட்டது.
பிப், ஏப்ரல், ஜூன் மாதங்களை சேர்த்து 1சதவீதம் குறைக்கப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 7-ம் தேதி ரெபோ விகிதத்தை 6.5சதவீதத்திலிருந்து 6.25சதவீதம் ஆக 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது, இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் முதல் குறைப்பாகும். இதையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி மேலும் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 6.0சதவீதம் ஆக குறைந்தது, இதனை தொடர்ந்து இன்று (ஜூன்6) 0.5சதவீதம் குறைத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து மும்முறை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது.

ரெபோ வட்டி விகிதம் என்றால் என்ன?

ரெபோ வட்டி விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்கும் வட்டி விகிதமாகும். இது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை நிர்வகிக்கவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ஆர்பிஐ பயன்படுத்தும் முறையாகும். ரெபோ விகிதம் குறையும்போது, வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதால், வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதங்களை குறைக்க முடியும்.
இந்தாண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.