திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (02.06.2025) தூத்துக்குடி மாவட்டம்இ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துஇ காய்ச்சிய பாலை பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர்இ கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனிஇ பொ. ஜெயராமன்இ இணை ஆணையர்கள் எம். அன்புமணிஇ எஸ். ஞானசேகரன்இ திருக்கோயில் தக்கார் ஆர். அருள் முருகன்இ உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் கோவிலில் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
